செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: வியாழன், 22 நவம்பர் 2018 (11:10 IST)

முதல்ல கேளுங்கய்யா,... நமீதாவின் இந்த நியாயமான கேள்வி!

நடிகை நமீதா அகம்பாவம் படத்தில் பத்திரிகையாளராக நடித்து வருகிறார். அண்மையில் அவர் அளித்த பேட்டியில்,  மீடு விவகாரம் தொடர்பாக பேசினார்.

"பெண்கள் தங்களுக்கு எதிராக நடக்கும் தொந்தரவுகளை தைரியமாக வெளிப்படுத்துவது மகிழ்ச்சியான விஷயம். மீடு மூலம் பெண்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதை முதலில் கேளுங்கள். 
 
அப்புறம் அவர்கள் சொல்வது உண்மையா பொய்யா என்பதை விசாரிக்கலாம். இப்ப எல்லாருமே உண்மை எது பொய் எது என்பதை கண்டுபிடிக்கும் அளவுக்கு புத்திசாலிங்களாத்தான் இருக்காங்க. இருந்தாலும் பெண்களும் மீடு விஷயத்தை தவறாக பயன்படுத்தக்கூடாது. முன்னாடி மாதிரி இனி கவர்ச்சியான  வேடங்கள்ல நடிக்க  விரும்பவில்லை. ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பேன். அதில் மட்டுமே எனது முழுகவனமும் இருக்கிறது" என்றார்.