1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 19 நவம்பர் 2018 (18:02 IST)

அகம்பாவம் பிடித்த நமீதா - பத்திரிகையாளர்!

நடிகை நமீதா ‘அகம்பாவம்’ என்ற படத்தில் பத்திரிகையாளராக நடித்துள்ளார்.
 
ஒரு  பத்திரிகையாளராக  நடித்துள்ள நமீதா இந்தப்படத்திற்காக 10 கிலோ உடல் எடையை குறைத்துள்ளார். 
 
தமிழக மச்சான்ஸ்களின் மனதில் கூடுகட்டி வாழ்ந்த நமீதா பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பட்டிதொட்டியெங்கும் பரவலாக பேசப்பட்டார். நடிகை நமீதா சமீபத்தில் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். 
 
திருமணத்துக்குப் பின் நடிக்காமல் பல கதைகளை மட்டும் கேட்டு வந்த நமீதா,  கதை பிடிக்காமல் தொடர்ந்து பல படங்களை நிராகரித்தார். 
 
இவர் தற்போது ‘அகம்பாவம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை சரத்குமார் & நமீதாவை வைத்து ‘சத்ரபதி’ படத்தை இயக்கிய ஸ்ரீமகேஷ் இயக்கி வருகிறார். வில்லனாக வாராகி நடிப்பதுடன் இந்தப் படத்தையும் தயாரிக்கிறார். இந்தப் படத்தில் நடிகர்கள் மனோபாலா, மாரிமுத்து, அப்புக்குட்டி, நாடோடிகள் கோபால், ஜாக்குவார் தங்கம் மற்றும் பலர் நடிக்கின்றனர். 
 
இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள செய்தி என்னவென்றால், இந்தப்படத்திற்காக நடிகை நமீதா 10 கிலோ உடல் எடையை குறைத்துள்ளார். 
 
படத்தில் நடிகை நமீதா, ஒரு பத்திரிகையாளராக நடித்துள்ளார். இந்தப் படத்திற்கு ‘கோலிசோடா’, ‘சண்டிவீரன்’ ஆகிய படங்களுக்கு இசையமைத்த அருணகிரி இசையமைக்கிறார்.
 
தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.