1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: திங்கள், 24 ஜூன் 2024 (13:50 IST)

முதியவரை பவுன்சர் தள்ளிவிட்ட விவகாரம்.. மன்னிப்பு கேட்டார் நாகார்ஜுனா..!

நடிகர் நாகார்ஜுனா ஹைதராபாத் விமான நிலையத்தில் நடந்து சென்று கொண்டிருந்தபோது முதியவர் வருவார் அவரிடம் பேச பக்கத்தில் வந்தாரா அப்போது பவுல்சர் அந்த முதியவரை தள்ளி விட்டதில் அந்த முதியவர் நிலை தடுமாறி கீழே விழுந்த சம்பவத்தின் வீடியோ பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
இந்த வீடியோ இணையத்தில் வரலாறு வரும் நிலையில் இருந்தன என்பதும் இந்த சம்பவத்தை நடிகர் தனுஷ் அருகில் இருந்து பார்த்துக் கொண்ட போதிலும் அவர் இது குறித்து எதையும் தெரிவிக்கவில்லை என்பதால் அவருக்கும் கண்டனங்கள் குவிந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் நடிகர் நாகார்ஜுனா தனது சமூக வலைதளத்தில் இது குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கக்கூடாது என்றும் கீழே விழுந்த அந்த நபரிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றும் இனிமேல் இதுவே இது போன்று நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva