வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 13 ஜூன் 2024 (15:43 IST)

வாடகைக்கு இருந்தவரை காலி செய்ய சொன்ன தனுஷ்.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

நடிகர் தனுஷ் வாடகைக்கு இருந்தவரை காலி செய்ய சொன்ன நிலையில் வாடகைக்கு இருந்தவர் தாக்கல் செய்த வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. 
 
கடந்த 2022 ஆம் ஆண்டு அஜய் என்பவர் போயஸ் தோட்டத்தில் இருந்த வீட்டில் வாடகைக்கு இருந்த நிலையில் அந்த வீட்டை தனுஷ் வாங்கி இருப்பதாகவும் உடனடியாக அந்த வீட்டிடை காலி செய்ய வேண்டும் என்றும் தனுஷ் தரப்பினர் கூறியதாகவும் தெரிகிறது. 
 
இதை அடுத்து அஜய் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த நிலையில் 2024 ஆம் ஆண்டு ஜனவரி வரை தங்களுக்கு வாடகை ஒப்பந்த பத்திரம் இருப்பதாகவும் எனவே தனுஷ் காலி செய்ய சொல்ல உரிமை இல்லை என்றும் மனு தாக்கல் செய்தார். 
 
இந்த மனு மீதான விசாரணை கடந்து செல்ல மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது தனுஷ் தரப்பு நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனுவில் வாடகைக்கு இருந்தவருக்கும் தங்களுக்கும் இடையே சமரசம் ஏற்பட்டு விட்டதாகவும் வாடகைக்கு இருந்த அஜய் வீட்டை காலி செய்துவிட்டு சாவியை ஒப்படைத்து விட்டதாகவும் எனவே இந்த வழக்கை முடித்து வைக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. இதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் இந்த வழக்கை முடித்து வைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது. 
 
Edited by Mahendran