செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: புதன், 24 நவம்பர் 2021 (12:02 IST)

விவாகரத்துக்கு பின் ப்ரியா பவானிசங்கருடன் ஜோடி சேரும் நாக சைதன்யா!

நடிகை சமந்தாவை சமீபத்தில் விவாகரத்து செய்த நடிகர் நாக சைதன்யா தற்போது பிரியா பவானி சங்கர் உடன் ஜோடி சேர இருப்பதாக கூறப்படுகிறது
 
தெலுங்கு திரையுலகின் இளம் நடிகர்களில் ஒருவரான நாகசைதன்யா தற்போது இரண்டு படங்களில் நடித்து வருகிறார் என்பதும் அந்த படங்களின் படப்பிடிப்பு முடிவடைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் நாகசைதன்யா அடுத்ததாக ஒரு வெப்தொடரில் நடிக்க இருப்பதாகவும் இந்த தொடரை விக்ரம் குமார் இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. விக்ரம் குமார் ஏற்கனவே யாவரும் நலம், 24 ஆகிய படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த தொடரில் நாக சைதன்யா ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் நடிக்க இருப்பதாகவும் இந்த தொடரின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது ஒருபக்கம் விவாகரத்துக்கு பின்னர் பல திரைப்படங்களில் சமந்தா நடிக்க ஒப்பந்தம் ஆகி வரும் நிலையில் வெப்தொடரில் நடிக்க நாகசைதன்யா ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது