செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 19 ஜூன் 2019 (12:29 IST)

நடிகர் சங்க தேர்தலை நிறுத்த அதிரடி உத்தரவு! விஷால் பட்ட கஷ்டமெல்லாம் வீண்!

ஜூன் 23ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்த நடிகர் சங்க தேர்தலை உடனே நிறுத்துமாறு மாவட்ட பதிவாளர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
நடிகர் சங்க தேர்தலில் பல்வேறு குளறுபடி இருப்பதாக சங்கரதாஸ் அணியினர் குற்றஞ்சாட்டினர். குறிப்பாக தேர்தலை நடத்துவது ஓய்வு பெற்ற நீதிபதியா? அல்லது விஷாலா? என்ற கேள்வியை சங்கரதாஸ் அணியினர் எழுப்பினர். மேலும் வாக்காளர் பட்டியலிலும் ஏகப்பட்ட குளறுபடி இருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டது. சங்கத்தில் இருந்து 100 உறுப்பினர்கள் நீக்கப்பட்டு 400 உறுப்பினர்கள் புதிதாக சேர்க்கப்பட்டதாகவும் புகார் கூறப்பட்டது. மேலும் தேர்தல் நடத்தும் இடம் குறித்த வழக்கு ஒன்றும் நீதிமன்றத்தில் உள்ளது
 
இந்த நிலையில் நடிகர் சங்க தேர்தல் நடத்துவதில் ஏகப்பட்ட குளறுபடிகள் இருப்பதால் இந்த பிரச்சனைகள் தீர்க்கப்படும் வரை தேர்தலை நடத்தக்கூடாது என்று மாவட்ட பதிவாளர் சற்றுமுன் உத்தரவிட்டுள்ளார்
 
தேர்தலை நடத்தி மீண்டும் பதவியை பிடிக்க வேண்டும் என்று விஷால் தீவிர முயற்சியில் இருந்தார். இதற்காக ஒருசில லட்சங்கள் பாண்டவர் அணியினர் செலவு செய்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் நடிகர் சங்க தேர்தல் விவகாரம் தொடர்பாக முதல்வரை சந்திக்காமல் இன்று விஷால், கவர்னரை சந்தித்ததும் ஆளும் கட்சியை அதிருப்தி செய்ததாகவும் கூறப்படுகிறது. மொத்தத்தில் ஊடகங்களால் பில்டப் செய்யப்பட்டு வந்த நடிகர் சங்க தேர்தலுக்கு தடை விதிக்கப்பட்டது ஒருவகையில் நன்மையே என பொதுமக்கள் கூறி வருகின்றனர்.