வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 18 ஜூன் 2019 (22:02 IST)

ஒரு பைசாவுக்கு பிரயோஜமில்லாத நடிகர் சங்க தேர்தல்! நெட்டிசன்கள் குமுறல்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு இணையாக ஊடகங்களில் நடிகர் சங்க தேர்தல் குறித்து செய்திகள் வெளியாகி வருகிறது. நடிகர் சங்கத்தில் உள்ள சுமார் 2000 உறுப்பினர்கள் அவர்களுக்குள் ஒரு தலைவர், ஒரு செயலாளர், ஒரு பொருளாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர்களை தேர்வு செய்ய ஒரு தேர்தலை நடத்துகின்றனர். இந்த தேர்தலால் மக்களுக்கு ஒரு நயாபைசா அளவுக்கு கூட பயன் இல்லை
 
ஆனால் ஊடகங்களும், தொலைக்காட்சிகளும், பத்திரிகைகளும் இந்த தேர்தல் குறித்து தொடர்ச்சியாக செய்தி வெளியிட்டு கொண்டே உள்ளது. ஒன்று அல்லது இரண்டு செய்தி வெளியிட்டால் கூட பரவாயில்லை. இதனைகூட பிரேக்கிங் செய்தியாக வெளியிட்டு வருவதாக நெட்டிசன்கள் குமுறி வருகின்றனர்.
 
மேலும் நடிகர் சங்க தேர்தல் நடைபெறும் நாளில் தேர்தல் நடைபெறும் இடத்தில் இருந்து காலை முதல் இரவு ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் வரை கிட்டத்தட்ட முன்னணி தொலைக்காட்சிகள் அனைத்தும் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன. ஓட்டு போட வரும் நடிகர், நடிகைகளை பேட்டி எடுத்து ஒளிபரப்பி தேவையில்லாமல் மக்களின் நேரத்தையும் வீணாக்கி வருகின்றனர். இந்த தேர்தல் நடந்தால் என்ன? நடக்காவிட்டால் என்ன? எனவே ஊடகங்கள் நடிகர் சங்க தேர்தலுக்கு முக்கியத்தும் கொடுக்காமல் தண்ணீர் பிரச்சனை உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்த செய்திக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்பதே நெட்டிசன்களின் கோரிக்கையாக உள்ளது