ஹாலிவுட்டுக்கு அழைத்து செல்ல சொல்லும் செல்வராகவன்… செய்வாரா தனுஷ்!
நடிகர் தனுஷ் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு அவரின் அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.
தனுஷ் நடிப்பில் இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகவுள்ள நானே வருவேன் என்ற படத்தின் போஸ்டர் சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது. தனுஷ் செல்வராகவன் கூட்டணீ 8 ஆண்டுகளுக்குப் பின் இணைந்துள்ள நிலையில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பட வேலைகளில் பிஸியாக இருக்கும் செல்வராகவன் சமீபத்தில் ஆனந்த விகடன் ஊடகத்துக்கு அளித்த நேர்காணலில் தனுஷின் அசுர வளர்ச்சி பற்றி பேசியுள்ளார். அதில் ஹாலிவுட் வரை சென்ற தனுஷ் பற்றி கேட்டபோது என்னை எப்போது ஹாலிவுட்டுக்கு அழைத்து செல்ல போகிறாய் என தனுஷிடம் நான் கேட்டுள்ளேன் எனக் கூறியுள்ளார்.