செல்வராகவன் &தனுஷ் படத்தின் கதாநாயகி இவர்தானா? ஆச்சர்யத்தில் ரசிகர்கள்!
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ள படத்தின் கதாநாயகியாக தமன்னா நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
தனுஷ் நடிப்பில் இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகவுள்ள நானே வருவேன் என்ற படத்தின் போஸ்டர் சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது. தனுஷ் செல்வராகவன் கூட்டணீ 8 ஆண்டுகளுக்குப் பின் இணைந்துள்ள நிலையில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்த படத்தின் கதாநாயகியாக தமன்னா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே தனுஷுடன் தமன்னா படிக்காதவன் படத்தில் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.