வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 27 மே 2023 (13:56 IST)

விஜய்க்கு கூடிய சீக்கிரமே படம் பண்ணுவேன்… அது பேன் இந்தியா படமாக இருக்கும் – மிஷ்கின்!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான மிஷ்கின் இப்போது பிசாசு 2 படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தில் ஆண்ட்ரியா, பூஜா உள்ளிட்டவர்கள் நடிக்கின்றனர். முக்கியமான ஒரு வேடத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். அடுத்து அவர் விஜய் சேதுபதி நடிப்பில் ஒரு படத்தை இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் மிஷ்கின் நடிகராக மாவீரன் மற்றும் லியோ ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் லியோ படத்தில் விஜய்யுடன் ஏற்பட்ட நட்புப் பற்றி பேசிய அவர் “விரைவில் விஜய்யை வைத்து ஒரு படம் இயக்குவேன். அந்த படம் பேன் இந்தியா படமாக விஜய்க்கும் அவர் ரசிகர்களுக்கும் பிடித்த படமாக இருக்கும்.” எனக் கூறியுள்ளார். விஜய்யின் பாதையும் மிஷ்கினின் பாதையும் வேறு வேறாக இருக்கும் நிலையில் அவர்கள் இணையும் படம் எப்படி இருக்கும் என்பது பற்றிய எதிர்பார்ப்பு இப்போதே எழுந்துள்ளது.