1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 26 மே 2023 (18:41 IST)

கவினின் புதிய படம் அறிவிப்பு… அனிருத் இசை

தமிழ் சினிமாவின் இளம் நடிகர்  கவின்.  இவர் தொலைக்காட்சியில் சரவணன் மீனாட்சி என்ற சின்னத்திரை  நிகழ்ச்சியில் நடித்து வந்த நிலையில், பிக்பாஸ்  நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்களிடையே பிரபலமானார்.

இதையடுத்து, நட்புனா என்னன்னு தெரியுமா, லிப்ட்  போன்ற படங்களில்  நடித்திருந்தார். அதன்பின்னர்,  கணேஷ் இயக்கத்தில், டாடா என்ற படத்தில்  நடித்தார். இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில்,  கவினின் 4 வது படத்தை சதீஸ் கிருஷ்ணன் இயக்குகிறார். இப்படத்தில் பிரீத்தி அன்சாரி நடிக்கிறர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்.

இப்படத்தை ரோமியோ பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது. இன்று இப்படத்தின் பூஜை போடப்பட்டு  ஷூட்டிங் தொடங்கியுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் மிஷ்கின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.