1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated: சனி, 27 மே 2023 (13:12 IST)

''மாமன்னன்'' பட 2 வது சிங்கில் 'ஜிகு ஜிகு ரெயில்' பாடல் ரிலீஸ்!

juju rayil
‘’மாமன்னன்’’   படத்தில் ஏ.ஆ.ரஹ்மான் இசையில்  இடம்பெற்றுள்ள   2-வது சிங்கில் ‘ஜிகு ஜிகு ரெயில்’  என்ற பாடல் தற்போது வெளியாகியுள்ளது.

இயக்குனர் மாரி செல்வராஜ், உதயநிதி ஸ்டாலின் நடிப்பில்  மாமன்னன் என்ற படத்தை  இயக்கியுள்ளார்.

இப்படத்தில் வைகைப்புயல்  வடிவேலு, பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர்  முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு ஆஸ்கர் நாயகன்  ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின்  ஷூட்டிங் சமீபத்தில்  நிறைவடைந்த நிலையில், இப்படத்தின் போஸ்ட் புரடெக்சன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஏற்கனவே இப்படத்தின் முதல் சிங்கில் ‘’ராசாகண்ணு’  என்ற பாடலை  படக்குழு வெளியிட்டது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில்,  பாடலாசிரியர் யுகபாரதி எழுதின இப்பாடலை வடிவேலு பாடியிருந்தார். இப்பாடல் வைரலானது.

இந்த  நிலையில், மாமன்னன் பட 2 வது சிங்கில்- ஏ.ஆர்.ரஹ்மான் பாடியுள்ள  ‘’ஜிகு ஜிகு ரெயில் ‘’என்ற பாடல் ரிலீஸாகியுள்ளது.

மேலும், ஜூன் 1ஆம் தேதி சென்னை ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் ’மாமன்னன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.