ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 26 மே 2023 (08:52 IST)

ஒரு இடைவெளிக்குப் பிறகு… ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடல் எழுதும் தாமரை!

தமிழ் சினிமாவில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் பாடல் ஆசிரியர் தாமரை. இத்தனை ஆண்டுகளில் அவர் அதிகளவில் பாடல்கள் எழுதவில்லை என்றாலும், அவரின் பல பாடல்கள் எவர்கிரீன் ஹிட்டாகியுள்ளன. குறிப்பாக கௌதம் மேனன் படத்துக்காக ஹாரிஸ் ஜெயராஜ் மற்றும் ஏ ஆர் ரஹ்மான் ஆகியோரோடு இணைந்து பல ஹிட் பாடல்களை எழுதியுள்ளார். சமீபத்தில் ரிலீஸான வெந்து தணிந்தது காடு படத்தில் கூட அவர் எழுதிய “மல்லிப்பூ” பாடல் மிகப்பெரிய அளவில் கவனம் ஈர்த்தது.

இந்நிலையில் சில ஆண்டுகளாக படங்கள் இல்லாமல் ஒரு இடைவெளியில் இருந்து வருகிறார் ஹாரிஸ் ஜெயராஜ். இந்நிலையில் இப்போது ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் புதிய படம் ஒன்றுக்காக பாடல் எழுதுகிறார் தாமரை. இது சம்மந்தமாக பாடல் கம்போஸிங் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள தாமரை என்ன படம் எனன் பாடல் என்பது பின்னர் அறிவிக்கப்படும் எனக் கூறியுள்ளார். தமிழ் சினிமாவின் ஹிட் பாடல் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பது இசைப் பிரியர்களுக்கு மகிழ்ச்சியான ஒன்றாக அமைந்துள்ளது.