வியாழன், 19 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 17 செப்டம்பர் 2024 (09:09 IST)

100 கோடி ரூபாய் வசூல் க்ளப்பில் இணைந்த நானியின் ‘சரிபோதா சனிவாரம்’!

நானி, பிரியங்கா மோகன் மற்றும் எஸ் ஜே சூர்யா ஆகியோர் நடிப்பில் இயக்குனர் விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் பான் இந்தியா படமான 'சரிபோதா சனிவாரம்' படம் நேற்று ரிலீஸாகி பரவலாக பாராட்டுகளைப் பெற்று வருகிறது. இந்த படத்துக்கு இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்க, முரளி ஜி ஒளிப்பதிவு செய்கிறார். கார்த்திகா ஸ்ரீனிவாஸ் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

பான் இந்தியா திரைப்படமாக உருவாகும் 'சரிபோதா சனிவாரம்' திரைப்படம், தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் கடந்த மாத இறுதியில் வெளியானது. வெளியானது முதல் இந்த படம் வசூல் ரீதியாகக் கலக்கி வருகிறது.

அதற்கேற்றார் போல தெலுங்கில் பெரிய படங்களின் ரிலீஸ் எதுவும் இல்லாததால் இரண்டு வாரங்களைக் கடந்தும் ரசிகர்களை தியேட்டர்களுக்குள் ஈர்த்தது. இந்நிலையில் இந்த படம் இப்போது உலகளவில் 100 கோடி ரூபாய் கலெக்‌ஷனை எட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.