வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வியாழன், 12 செப்டம்பர் 2024 (17:33 IST)

ரூ.2.5 கோடி மட்டுமே வசூல்.. பயங்கர நஷ்டம்.. தெலுங்கு ‘கோட்’ விநியோகிஸ்தர்கள் புலம்பல்..!

Goat Poster
விஜய் நடித்த கோட் திரைப்படம் தமிழகம் உள்பட உலகம் முழுவதும் மிகப்பெரிய வசூலை பெற்றதாக கூறப்படும் நிலையில் தெலுங்கு மாநிலங்களில் மட்டும் இந்த படம் எதிர்பார்த்த வசூல் செய்யவில்லை என்று கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த ஐந்தாம் தேதி கோட் திரைப்படம் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகி முதல் நாளை ரூ.126 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்த நிலையில் ஆறு நாட்களில் இந்த படம் 318 கோடி ரூபாய் வசூல் செய்ததாகவும் கூறப்பட்டது. 
 
தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் இந்த படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் நல்ல லாபம் பெற்றதாக கூறப்படும் நிலையில் தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் இந்த படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு பெரும் நஷ்டம் என்று கூறப்படுகிறது. 
 
தெலுங்கு மாநில உரிமையை ரூ.16 கோடி கொடுத்து வாங்கிய நிலையில் தற்போது வரை இந்த படம் வெறும் 2.5 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்து இருப்பதாகவும் இதனால் வினியோ சரக்கு பயங்கர நஷ்டம் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran