வியாழன், 2 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: ஞாயிறு, 9 ஜூன் 2024 (10:36 IST)

கொம்பன் முத்தையாவின் அடுத்த படத்தில் நடிக்கும் இரண்டு இளம் ஹீரோக்கள்!

வரிசையாக கமர்ஷியல் ஹிட் படங்களைக் கொடுத்து வந்த இயக்குனர் முத்தையா கடைசியாக இயக்கிய காதர் பாட்சா என்ற முத்து ராமலிங்கம் படம் படுதோல்வி அடைந்தது. இதையடுத்து இயக்குனர் முத்தையாவின் அடுத்த படம் தொடங்குவதில் சிக்கல் உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இப்போது முத்தையா தனது மகன் விஜய் முத்தையாவை கதாநாயகனாக்கி ஒரு படத்தை இயக்கி வருகிறார்.

இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்துள்ள நிலையில் படத்தின் ரிலீஸ் வேலைகள் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து முத்தையா இயக்கும் அடுத்த படத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தை பைவ் ஸ்டார் கதிரேசன் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. 

ஆனால் அதற்கு முன்பாக முத்தையா இயக்கும் படத்தில் விக்ரம் பிரபு மற்றும் கௌதம் கார்த்திக் ஆகிய இருவரும் இணைந்து நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இவர்கள் இருவரும் ஏற்கனவே முத்தையா இயக்கத்தில் நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.