1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 2 அக்டோபர் 2020 (07:57 IST)

அடல்ட் காமெடி படத்தின் அப்பட்டமான காப்பி: நெட்டிசன்கள் கிண்டல்

அடல்ட் காமெடி படத்தின் அப்பட்டமான காப்பி: நெட்டிசன்கள் கிண்டல்
‘ஹர ஹர மகாதேவகி மற்றும் ’இருட்டு அறையில்  முரட்டுகுத்து’ ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் சந்தோஷ் ஜெயகுமார் இயக்கிய அடுத்த திரைப்படம் ’இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் இரண்டாம் பாகம் என்றும், இந்த படத்திற்கு ’இரண்டாம் குத்து’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பதும் தெரிந்ததே
 
இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய பஸ்ட் லுக் போஸ்டரை  நேற்று கௌதம் கார்த்திக் வெளியிட்டார் என்பதும் இந்த போஸ்டர் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அப்படியே ஹிந்தி படம் ஒன்றின் அப்பட்டமான காப்பி என தெரியவந்துள்ளது. இதனை அடுத்து இந்த இரண்டு படங்களின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரையும் நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் வெளியிட்டு கிண்டல் செய்து வருகின்றனர்
 
பர்ஸ்ட்லுக் போஸ்டரை கூட உருப்படியாக சொந்தமாக சிந்தித்து வெளியிட முடியாத இயக்குனர் படத்தை எப்படி சொந்தமாக எடுத்து இருப்பார் என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த இரண்டு போஸ்டர்களின் புகைப்படங்களும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது