வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வியாழன், 17 செப்டம்பர் 2020 (08:20 IST)

விஜய்யின் சூப்பர் ஹிட் பட இயக்குனரின் அடுத்த படத்தில் கௌதம் கார்த்திக்: புதிய தகவல்

தளபதி விஜய் நடித்த சூப்பர் ஹிட் படங்களில் மிகவும் முக்கியமானது ’துள்ளாத மனமும் துள்ளும்’. இந்த படம் அவருக்கு மிகப்பெரிய புகழை பெற்று கொடுத்தது என்பதும் இந்த படம் இன்றளவும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானால் விஜய் ரசிகர்கள் முழு படத்தையும் ஆர்வத்தோடு பார்ப்பார்கள் என்பது தெரிந்ததே 
 
இந்த படத்தை இயக்கிய இயக்குனர் எழில் அதன் பின்னர் பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும் அவ்வப்போது ’வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கி வந்தார் 
 
விஜய்யின் சூப்பர் ஹிட் பட இயக்குனரின் அடுத்த படத்தில் கௌதம் கார்த்திக்
இந்த நிலையில் இயக்குனர் எழில் இயக்கவுள்ள அடுத்த படம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. இந்த படத்தில் கௌதம் கார்த்திக் கதாநாயகனாகவும், நடிகர் பார்த்திபன் முக்கிய வேடத்திலும் நடிக்க உள்ளார். இருவரும் முதல் முறையாக இணைந்து நடிக்கவுள்ள இந்த திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது
 
இயக்குனர் எழில் தனது வழக்கமான ரொமான்ஸ் மற்றும் நகைச்சுவை அம்சத்தை கைவிட்டுவிட்டு இந்த படத்தில் இருந்து அவர் த்ரில் கதை அம்சத்தை கையில் எடுக்கிறார். இந்த படம் முழுக்க முழுக்க த்ரில் கதையம்சம் கொண்டது என்றும் பாடல்கள் இல்லாமல் முழுக்க முழுக்க சஸ்பென்ஸ் காட்சிகளுடன் இந்த படம் உருவாகும் என்றும் கூறப்படுகிறது