1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: ஞாயிறு, 15 அக்டோபர் 2017 (11:39 IST)

நடிகர் சிவகார்த்திகேயனின் முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

நடிகர் சிவகார்த்திகேயனின் முதல் சம்பளம் பற்றி தற்போது தெரிய வந்துள்ளது. சின்னத்திரையில் இருந்து வெகு விரையில் வெள்ளி திரைக்கு சென்றவர் சிவகார்த்திகேயன். மேலும் பெரிய திரையில் வேகமாக வளர்ந்து முன்னணி ஹீரோவாகவும்  உள்ளார்.

 
கோலிவுட் பக்கம் சென்றால் சிவகார்த்திகேயன் போன்று ஆக வேண்டும் என சின்னத்திரை பிரபலங்கள் ஆசைப்படும் அளவுக்கு உள்ளார். இந்நிலையில் சிவகார்த்திகேயனின் முதல் சம்பளம் பற்றி தெரிய வந்துள்ளது. சின்னத்திரைக்கு வரும் முன்பு சிவகார்த்திகேயன் திருவிழாக்களில் மிமிக்ரி செய்து அவர் வாங்கிய முதல் சம்பளம் 1000 ரூபாய் என்று கூறப்படுகிறது.
 
சிவகார்த்திகேயன் மோகன் ராஜா இயக்கத்தில் வேலைக்காரன் படத்தில் நயன்தாராக்கு ஜோடியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.