1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Sasikala
Last Modified: ஞாயிறு, 15 அக்டோபர் 2017 (12:51 IST)

யூ-ட்யூபை தெறிக்கவிட்ட இந்த படத்தில் நகைகள் செய்ய இத்தனை கிலோ தங்கமா?

சஞ்சய் லீலா பஞ்சாலி இயக்கத்தில் பாலிவுட் சினிமாவில் அனைவரும் பிரம்மிக்கும் அளவிற்கு தயாராகிவரும் படம் பத்மாவதி. அண்மையில் வெளியான இப்பட டிரெய்லர் ட்ரெய்லர் யூ-ட்யூபை தெறிக்கவிட்டு, ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

 
இந்த படத்தில் கதனாகியாக தீபிகா படுகோனே நடித்துள்ளார், சாகித் கபூர், ரன்வீர் சிங், அதிதி ராவ் என்று முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். 18-ம் நூற்றாண்டில் வாழ்ந்த ராணி பத்மினியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த படம்  எடுக்கப்பட்டது என்று கூறுகிறார்கள்.

 
சஞ்சய் லீலா பன்சாலி தனது படங்களுக்கு அதிக உழைப்பைக் கொடுத்து நேர்த்தியான தரத்தோடு ரசிகர்களுக்கு வழங்குபவர். படத்திற்கான கதை, கதைக்கான நாயகர்கள் தேர்விலும் எப்போதும் அதிக கவனமாக இருப்பவர் பன்சாலி. மேலும் படத்தில் தீபிகா படுகோனே அணிந்திருக்கும் நகைகளை 200 கைவினைக் கலைஞர்கள் சேர்ந்து, 400 கிலோ எடை கொண்ட தங்கத்தால்  600 நாட்களாக உருவாக்கப்பட்டதாம்.
 
ராஜபுத்திர காலத்தின் ஆபரணங்களைப் பற்றி நிறைய ஆய்வுகளைச் செய்து ஒவ்வொரு ஆபரணங்களும்  வடிவமைக்கப்பட்டிருக்கிறதாம்.