செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 12 ஆகஸ்ட் 2020 (09:47 IST)

மோகன் லால் கூட இருக்கும் இந்த நடிகர் யார் தெரியுதா?

நடிகர் மோகன் லாலுடன் மொட்டை ராஜேந்திரன் இருக்கும் பழைய புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக ஸ்டண்ட் நடிகராக இருந்தவர் ராஜேந்திரன். இயக்குனர் பாலா இயக்கிய நான் கடவுள் படத்தில் வில்லனாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். அதன் பிறகு பாஸ் என்கிற பாஸ்கரன் என்ற படத்தில் அவர் ஏற்று நடித்த நகைச்சுவை வேடம் ரசிகர்களை பெரிய அளவில் ஈர்த்தது.

அதில் இருந்து வரிசையாக நகைச்சுவை பாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார். இந்நிலையில் அவர் முன்பு ஸ்டண்ட் நடிகராக இருந்த போது மலையாள சூப்பர் ஸ்டார் நடிகரோடு எடுத்துக்கொண்ட புகைப்படம் இப்போது இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.