1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 10 ஆகஸ்ட் 2020 (09:36 IST)

இந்திய சினிமாவுக்கு ரஜினியின் பங்கு அளப்பரியது – காமன் டி பி வெளியிட்டு பாராட்டிய மலையாள சூப்பர் ஸ்டார்!

ரஜினிகாந்த் சினிமா உலகுக்கு அறிமுகமாகி 45 ஆண்டுகள் ஆவதை ஒட்டி அவருக்கான காமன் டிபியை வெளியிட்டுள்ளனர்.

ரஜினிகாந்த் தமிழ் சினிமா உலகுக்கு அறிமுகமானது 75 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி வெளியான அபூர்வ ராகங்கள் படத்தின் மூலமாக. அதன் பின்னர் தமிழ் சினிமாவில் வில்லனாக பல படங்களில் நடித்து ஒரு கட்டத்தில் கதாநாயகனாக மாறி பின்னர் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக மாறி வசூல் மழை பொழிந்தார்.

இந்நிலையில் இப்போதும் இந்திய அளவில் அதிக சம்பளம் வாங்கும் சூப்பர் ஸ்டாராக இருந்து வருகிறார். அவர் சினிமாவுக்கு 45 ஆண்டுகள் ஆவதை ஒட்டி காமன் டிபியை சிவகார்த்திகேயன் மற்றும் மோகன்லால் ஆகியோர் வெளியிட்டுள்ளனர். இந்த டிவீட்டில் மோகன் லால் ‘5 பதிற்றாண்டுகள். … 45 வருடங்கள்… ஒரு அடையாளம். இந்திய சினிமாவின் முகம். இந்த காமன் டிபியை வெளியிடுவதில் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. இந்திய சினிமாவுக்கு ரஜினிகாந்த் அளித்தது அளப்பரியது’ எனக் கூறியுள்ளார்.