செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 10 ஆகஸ்ட் 2020 (12:10 IST)

நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தொழிலாளர்கள் – கண்ணீர் வரவைக்கும் புகைப்படம்!

கேரளாவில் கடுமையான மழை பெய்து வரும் நிலையில் நிலச்சரிவில் சிக்கி தொழிலாளர்கள் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது.

கேரளாவில் கடந்த சில நாட்களாக கடுமையான மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இடுக்கி மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி தொழிலாளர் குடியிருப்பில் தங்கி இருந்த தொழிலாளர்கள் மண்ணுக்குள் புதைந்து பலியாகினர். அந்த எண்ணிக்கை இப்போது 37 ஐக் கடந்துள்ளது.

இந்நிலையில் மண்ணுக்குள் இருந்து தொழிலாளர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அது சம்மந்தமான புகைப்படம் ஒன்று இப்போது இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.