புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 7 பிப்ரவரி 2020 (18:17 IST)

அருள் பாலிக்க வருகிறாள் "மூக்குத்தி அம்மன்" - படப்பிடிப்பு நிறைவு..!

ஆர் ஜே பாலாஜியின் இயக்கத்தில் உருவாகும் முதல் படமான "மூக்குத்தி அம்மன்" படத்தில் நயன்தாரா நடித்துள்ளார். என் ஜே சரவணன் சேர்ந்து இயக்கும் இப்படத்தில் கௌதம் கார்த்திக், யாஷிகா ஆனந்த் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். 
 
இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் ஷூட்டிங் முழுவதுமாக நிறைவடைந்துள்ளதாக கூறி படத்தின் இயக்குனர்  RJ பாலாஜி சரர்முன் தனது ட்விட்டர் தெரிவித்துள்ளார். 
 
மேலும் இப்படம் வருகிற கோடை விடுமுறையை குறிவைத்து ரிலீஸ் ஆகவுள்ளதை மீண்டும் ஒரு முறை உறுதி செய்துள்ளார். எனவே நயன்தாராவை அம்மன் வேடத்தில் பார்க்க அவரது ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.