செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : வெள்ளி, 7 பிப்ரவரி 2020 (11:09 IST)

"அயலான்" படத்திற்காக பொட்டி படுக்கையுடன் சென்னை வந்த பாலிவுட் நடிகை!

சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் அயலான் படத்தின் படப்பிடிப்பு வேகமெடுத்துள்ளது. வேற்றுகிரக மனிதர்களை கொண்ட இத்திரைப்படத்தை  ரவிக்குமார் இயக்குகிறார். ரகுல் ப்ரீத் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கும் இப்படத்தை 24AM Studios நிறுவனம் தயாரிக்கிறது.
 
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தில் யோகி பாபு,கருணாகரன்,ஈஷா கோபிகர்,பாலசரவணன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. சமீபத்தில் இப்படத்தில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கியது. சமீபத்தில் வெளிவந்த இப்படத்தின் டைட்டில் டீசர் சமூகவலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டது. 
 
இந்நிலையில் தற்போது பிரபல பாலிவுட் நடிகை ஈஷா கோபிகர் இப்படத்தில் இணையவுள்ளாராம். இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சென்னைக்கு படப்பிடிப்புக்காக வந்துள்ளதாக  கூறி பதிவிட்டுள்ளார். இவர் தமிழ் , தெலுங்கு ,மராத்தி , கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Headed to Chennai to shoot! ✈️ #Workmode #movie #shooting #films

A post shared by Isha Koppikar Narang (@isha_konnects) on