புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 6 பிப்ரவரி 2020 (20:28 IST)

அடுத்த மாதம் வெளியாகும் சந்தானம் படத்தின் டைட்டில் இதுதான்!

காமெடி நடிகராக இருந்து ஹீரோவாக புரமோஷன் ஆன நடிகர் சந்தானம் நடித்த ’டகால்டி’ திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியான நிலையில் அடுத்த வாரம் வெள்ளியன்று சந்தானம் நடித்த இன்னொரு திரைப்படமான ’சர்வர் சுந்தரம்’ என்ற திரைப்படம் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் வரும் மார்ச் மாதம் வெளியாக உள்ள சந்தானம் நடித்த படம் ஒன்றின் டைட்டில் சற்றுமுன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது
 
பிரபல இயக்குநர் ஆர்.கண்ணன் இயக்கத்தில் சந்தானம் நடித்து வந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இந்த படத்திற்கு பிஸ்கோத், என்ற டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டைட்டில் சந்தானம் ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது
 
ராதான் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை இயக்குநர் கண்ணனே தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் காமெடி மற்றும் சமூக கருத்து அடங்கிய இந்த படம் சந்தானத்திற்கு நிச்சயம் ஒரு திருப்புமுனையாக இருக்கும் என கருதப்படுகிறது. ஏற்கனவே ஆர் கண்ணன் இயக்கத்தில் ஜெயம் கொண்டான், வந்தான் வென்றான், சேட்டை போன்ற படங்களில் காமெடி கேரக்டரில் நடித்து இருந்த சந்தானம் தற்போது அவர் இயக்கும் படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது