புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 7 பிப்ரவரி 2020 (07:56 IST)

நயன்தாராவுடன் யாஷிகா மோதலா? பரபரப்பு தகவல்

யாஷிகா கவுதம் கார்த்திக
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் ஆர்ஜே பாலாஜி இயக்கிவரும் ’மூக்குத்தி அம்மன்’ என்ற படத்தின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ள நிலையில் திடீரென இந்த படத்தில் யாஷிகா இணைந்துள்ளார் 
 
யாஷிகா இந்த படத்தில் ஒரு நெகட்டிவ் கேரக்டரில் நடித்து வருவதாகவும், நயன்தாரா மற்றும் யாஷிகா மோதும் காட்சிகள் இந்த படத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இளம் நடிகர் கார்த்திக் கௌதம் என்ற படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படம் வரும் மே மாதம் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது
 
மூக்குத்தி அம்மன்’ என்ற இந்த படத்தில் நயன்தாரா நடிக்கும்போது அம்மன் வேடத்தில் நடிப்பதால் விரதம் இருந்ததாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி முதல்முறையாக அம்மன் வேடத்தில் நடிப்பதால் அவர் இதற்கு முன் வெளிவந்த அம்மன் படங்களை எல்லாம் பார்த்து, அந்த நடிப்பின் சாயல் வந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்ததாகவும், படப்பிடிப்பின்போது ஆர்ஜே பாலாஜிக்கு தனது கேரக்டர் குறித்து நயன்தாரா சில டிப்ஸ்களை கூறியதாகவும் அவற்றை ஆர்ஜே பாலாஜி ஏற்றுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது