மூக்குத்தி அம்மன் படத்தின் "பகவதி பாபா" வீடியோ பாடல் ரிலீஸ்!
நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாவது பாடல் வீடியோ ரிலீஸ்
காமெடி நடிகர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடித்து தயாராகியுள்ள படம் மூக்குத்தி அம்மன். காமெடி டிராமா ரக படமான இதற்கு மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உள்ளது. கொரோனா காரணமாக மார்ச் மாதம் முதலாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் படங்களை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் பல திரைப்படங்கள் ஓடிடிக்கு விற்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் மூக்குத்தி அம்மன் திரைப்படம் வருகிற நவம்பர் 14ம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது. அண்மையில் இப்படத்தின் "ஆடி குத்து" என்ற முதல் சிங்கிள் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து தற்ப்போது "பகவதி பாபா" என்ற இரண்டாவது பாடல் வீடியோ வெளியாகியுள்ளது.
அந்தோணி தாசன் பாடியுள்ள இந்த பாடலுக்கு பா. விஜய் லிரிக்ஸ் எழுதியுள்ளார். இந்த பாடல் பக்தியின் பெயரில் மக்களை ஏமாற்றும் போலி சாமியாரின் லீலைகள் பற்றி கூறுகிறது. இந்த பாடலில் கவர்ச்சி நடிகை யாஷிகாவுடன் சாமியார் கூத்தடிப்பதெல்லாம் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இதோ அந்த பாடல் வீடியோ...