1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: திங்கள், 2 நவம்பர் 2020 (19:58 IST)

ஆடி குத்து... "மூக்குத்தி அம்மன்" படத்தின் வீடியோ பாடல் ரிலீஸ்!

நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் படத்தின் முதல் பாடல் வீடியோ ரிலீஸ்

காமெடி நடிகர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடித்து தயாராகியுள்ள படம் மூக்குத்தி அம்மன். காமெடி டிராமா ரக படமான இதற்கு மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உள்ளது. கொரோனா காரணமாக மார்ச் மாதம் முதலாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் படங்களை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் பல திரைப்படங்கள் ஓடிடிக்கு விற்கப்பட்டு வருகின்றன.

மூக்குத்தி அம்மன் திரைப்படம் வருகிற நவம்பர் 14ம் தேதி  டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது. இந்நிலையில் தற்ப்போது இப்படத்தில் இடம்பெறும் "ஆடி குத்து" என்ற முதல் சிங்கிள் பாடல் யூடியூபில் ரிலீஸ் ஆகியுள்ளது. இதோ அந்த பாடல் வீடியோ...