சிரஞ்சீவியின் காட்ஃபாதர் பட வெற்றி… பாலிவுட்டில் இருந்து இயக்குனருக்கு வரும் வாய்ப்புகள்!
மலையாளத்தில் மோகன் லால் நடிப்பில் நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில் வெளியான சூப்பர் ஹிட் படம் லூசிபர். இப்படம் மலையாள சினிமாவில் 200 கோடி வசூலித்த முதல் திரைப்படம் என்ற சாதனையை நிகழ்த்தியது. இதையடுத்து இந்த படம் இப்ப்போது தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. லூசிபர் என்ற பெயர் காட்பாதர் என மாற்றப்பட்டுள்ளது. மோகன் லால் வேடத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கிறார்.
இந்த படத்தை எப்படியாவது ஹிட் ஆக்கிவிட வேண்டும் என்பதற்காக பாலிவுட் நடிகர் சல்மான் கானை ஒரு சிறப்பு வேடத்தில் நடிக்க வைத்துள்ளனர். கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி வெளியான இந்த படத்தை ஆந்திரா மற்றும் தெலங்கானா தவிர பிற மாநிலங்களில் பெரியளவில் பிஸ்னஸ் செய்யவில்லை.
வெளியான 3 நாட்களில் இந்த திரைப்படம் 100 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இந்த படத்தைப் பார்த்த ரஜினிகாந்த் இயக்குனர் மோகன் ராஜாவை அழைத்துப் பாராட்டியுள்ளாராம். இதை மோகன் ராஜா தன்னுடைய சமூகவலைதளப் பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில் இந்த படத்தின் வெற்றியால் இயக்குனர் மோகன் ராஜாவுக்கு அடுத்தடுத்து தெலுங்கு மற்றும் இந்தி சினிமாக்களில் இருந்து வாய்ப்புகள் குவிய ஆரம்பித்துள்ளதாம். இதனால் அவரின் அடுத்த பட அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.