1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 17 ஆகஸ்ட் 2022 (15:48 IST)

லூசிஃபர் படத்தின் இரண்டாம் பாகத்தை அறிவித்த பிருத்விராஜ்

லூசிபர் படத்தின் இரண்டாம் பாகத்துக்கான அறிவிப்பை நடிகரும், இயக்குனருமான பிருத்விராஜ் அறிவித்துள்ளார்.

மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவர் பிருத்விராஜ். இவர் தனது முதல்படமாக மோகன்லாலை வைத்து லூசிபர் படத்தை இயக்கி பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தார். ஆனால் அதன் பின்னர் நடிப்பில் மீண்டும் கவனம் செலுத்த தொடங்கினார்.  இதையடுத்து லூசிபர் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகுமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.

ஏற்கனவே பிருத்விராஜ் மற்றும் மோகன்லால் கூட்டணியில் உருவாவதாக இருந்த எம்பூரான் திரைப்படம் (லூசிபர் 2) அறிவிக்கப்பட்டது. ஆனால் கொரோனா காரணமாக தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து தற்போது பிருத்விராஜ் மோகன் லாலுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து லூசிபர் 2 படத்தை அறிவித்துள்ளார்.