வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 16 ஆகஸ்ட் 2022 (15:41 IST)

ஆர்யா முத்தையா கூட்டணியில் உருவாகும் ரீமேக் படம்!

ஆர்யா நடிப்பில் முத்தையா இயக்கும் படத்துக்கான வேலைகள் தற்போது தொடங்கியுள்ளன.

சசிக்குமார் நடித்த குட்டிப் புலி மற்றும்  கார்த்தி நடித்த கொம்பன் ஆகிய படங்களை இயக்கியவர் முத்தையா, அவர் படங்களில் சாதியக் கருத்துகள் இடம்பெற்று வருவதாக ஒரு குற்றச்சாட்டு அவர் மேல் வைக்கப்படுகிறது. ஆனாலும் தென் மாவட்டங்களில் அவர் படங்கள் நல்ல வெற்றியைப் பெறுகின்றன. இந்நிலையில் சமீபத்தில் விக்ரம் பிரபு மற்றும் லஷ்மி மேனன் ஆகியவர்களை வைத்து உருவாக்கிய புலிக்குத்தி பாண்டி திரைப்படம் நேரடியாக சன் தொலைக்காட்சியில் வெளியானது.

இப்போது கார்த்தியை வைத்து அவர் விருமன் படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்நிலையில் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்துக்காக ஆர்யா நடிப்பில் முத்தையா ஒரு படத்தை இயக்க பேச்சுவார்த்தை நடந்துவருவதாக சொல்லப்பட்டது. ஆனால் இப்போது அந்த படத்தைக் கமல் தயாரிக்காமல் டிரம்ஸ்டிக் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தின் இந்த ஆண்டின் இறுதியில் தொடங்க உள்ளதாக தெரிகிறது.

இந்த திரைப்படம் கன்னட திரைப்படம் ஒன்றின் ரீமேக் என சொல்லப்படுகிறது. இதற்கான உரிமையை நடிகர் ஆர்யா வாங்கி வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.