புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : வெள்ளி, 19 அக்டோபர் 2018 (17:51 IST)

ராட்சசன் படத்தை பார்த்து பாராட்டிய மு.க. ஸ்டாலின்

ராட்சசன் படத்தை பார்த்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், படக்குழுவினரை வெகுவாக பாராட்டினார்.
 
`முண்டாசுப்பட்டி’ இயக்குநர் ராம்குமார் இயக்கத்டிதல் விஷ்ணு விஷால், அமலாபால்  நடிப்பில் கடந்த வாரம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் ராட்சஷன். பள்ளி மாணவிகளைக் கொடூரமாகக் கொலை செய்யும் சீரியல் கில்லர் மற்றும் அவனை வேட்டையாடிப் பிடிக்க முயலும் போலீஸ் அதிகாரி இதுதான் ராட்சசன் கதை.  திரில்லர்  மற்றும் சைகோ டைப் படமான இதற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. 
 
இதனால் இரண்டாவது வாரமாக ராட்சசன் படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  'ராட்சசன்' படத்தை பார்க்க விரும்பியுள்ளார்.  இதை கேட்டு சந்தோஷமடைந்த படக்குழுவினர் உடனடியாக ஏற்பாடு செய்தனர். 
 
சென்னையில் உள்ள பிரிவியூ தியேட்டரில் ராட்சசன் படத்தை  ஸ்டாலின் பார்த்தார். தொடர்ந்து படக்குழுவினரையும் வெகுவாக பாராட்டினார்.
 
இதுகுறித்து நடிகர் விஷ்ணு விஷால் கூறுகையில், ஸ்டாலின் சார் படத்தை பார்த்தது மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த படக்குழுவையும் பாராட்டினார். இந்த பாராட்டுக்கள் ஒரு நடிகராக ராட்சசன் மாதிரியான நல்ல படங்களை தொடர்ந்து கொடுக்க வேண்டும் என்ற உத்வேகத்தை எனக்குள் ஏற்படுத்தி இருக்கு. வசூலிலும் ராட்சசன் நல்ல இடத்துலதான் இருக்குது என்றார்.