புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 19 அக்டோபர் 2018 (17:51 IST)

சர்க்கார் படத்தில் தளபதி விஜய் பெயர் இதுதானா !

தீபாவளி தினத்தன்று சரவெடியாக வெடிக்கவுள்ள சர்க்கார் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். 
 
ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வெளிவந்துள்ள பாடல்கள் மக்கள் மத்தியில் பட்டய கிளப்பி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து, இன்றுவரை இணையத்தில் கலக்கிவருகிறது சர்க்கார் பட பாடல்கள். 
 
இந்நிலையில் , இன்று மாலை சர்க்கார் படத்தின் டீஸர் வெளியாகவுள்ளது. எங்கு பார்த்தாலும் தளபதியின் போஸ்டர்கள், பேனர்கள், கட்-அவுட் என உற்சாகத்தின் உச்சியில் காத்துக்கொண்டிருக்கிறார்கள் அவரது ரசிகர்கள்.
 
இதனைத் தொடர்ந்து ரசிகர்களுக்கு மேலும் இன்பம் ஊட்டும் வகையாக செய்தியொன்று வெளிவந்துள்ளது. அது என்னவென்றால் சர்க்கார் படத்தில் தளபதியின் பெயர் "சுந்தர் ராமசாமி" என்பது தான். காந்த கண்களோடு  சுந்தர் ராமசாமியின் ஒவ்வொரு வசனங்கள் மற்றும் க்ளோஸ்-அப் ஷாட்களுக்கு அரங்கமே அதிரும் என்பதில் எந்த சந்தீகமும் இல்லை.