திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 7 ஜூன் 2021 (22:25 IST)

வாய்ப்பு பறிபோனதா? சூர்யா பட நடிகை ஓபன் டாக்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவ அஞ்சலி இவர் தனக்கு வந்த வாய்ப்புகள் பறிபோனதா என்பது குறித்துத் தெரிவித்துள்ளார்.

கற்றது தமிழ், அங்காடித் தெரு, சூர்யாவின் சிங்கம் போன்ற படங்களில் நடித்தவர் அஞ்சலி. இவர் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த நிலையில், தெலுங்கு சினிமா பக்கம் சென்று நடித்து வந்தார். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் வக்கீல் சாப். இப்படம் பெரிய வெற்றி பெற்றது.

இந்நிலையில், தமிழ் சினிமாவில் அவரது வாய்ப்பு குறைந்ததா? இல்லை இளம் நடிகைகள் இவரது வாய்ப்பை பறித்தார்களா என்பது குறித்து ஒரு பேட்டியில் அஞ்சலி கூறியுள்ளார். அதில், இயக்குநர்கள் தாங்கள் தேர்ந்தெடுக்கும் கதை , சூழல்,கதாப்பாத்திரம் ஆகியவற்றின் அடிப்படையில் நடிகைகளைத்தேர்வு செய்கிறார்கள்…இதற்காக நான் யாரையும் குறை கூற மாட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.