செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 7 ஜூன் 2021 (17:00 IST)

HBD பாண்டியராஜ்….சிவகார்த்திகேயன் வாழ்த்து

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர் பாண்டிராஜ். இவரது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் வாழ்த்து கூறிவருகின்றனர்.

கடந்த 2009 ஆம் ஆண்டு பசங்க என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனவர் பாண்டிராஜ்.

அதன்பின்னர், வம்சம், மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா,  மூடர் கூடம், கோலி சோடா , கடைக்குட்டி சிங்கம், நம்ம வீட்டுப் பிள்ளை உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். தற்போது சூர்யா நடிப்பில் ஒரு படத்தை அவர் இயக்கிவருகிறார்.

இந்நிலையில், இவரது பிறந்தநாளை முன்னிட்டு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்துக் கூறி  வருகின்றனர்.

நடிகர் சிவகார்த்திகேயன் தனது டுவிட்டர் பக்கத்தில், எங்கள் இயக்குனர்@pandiraj_dir சாருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்  எனத் தெரிவித்துள்ளார்.