செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 20 நவம்பர் 2019 (21:34 IST)

சசிகுமாருக்கு ஜோடியாகும் சூப்பர்டீலக்ஸ் பட நடிகை

சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் ரஜினிமுருகன் ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் பொன்ராம் தற்போது ’எம்ஜிஆர் மகன்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் நாயகனாக சசிகுமார் நடித்து வரும் நிலையில் அவருக்கு ஜோடியாக சூப்பர்டீலக்ஸ் படத்தில் நடித்த நடிகை ஒருவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் 
 
சூப்பர்டீலக்ஸ் படத்தில் வேற்றுக்கிரகவாசியாக ஒரு பெண் நடித்திருப்பார் என்பது தெரிந்ததே. அவர்தான் மிருணாளினிரவி. இவர்தான் இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் 
 
இந்த படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் முடிந்து விட்டதாகவும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு போஸ்ட் புரடொக்சன்ஸ் பணியை தொடங்க இருப்பதாகவும் இயக்குனர் பொன்ராம் தெரிவித்துள்ளார் 
 
பிரபல விநியோகஸ்த நிறுவனமான ஸ்கிரீன் சீன் மீடியா என்டர்டைன்மென்ட் பிரைவேட் லிமிடெட் தயாரித்து வரும் இந்த படத்தில் முக்கிய கேரக்டர்களில் சமுத்திரகனி, சத்யராஜ், சரண்யா, சிங்கம்புலி உள்பட பலர் நடித்து வருகின்றனர். அந்தோணிதாசன் இசையமைக்கும் இந்த படத்திற்கு வினோத் ஒளிப்பதிவும், விவேக்-ஹர்சன் படத்தொகுப்பு பணியும் செய்து வருகின்றனர்.