1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 24 அக்டோபர் 2019 (11:53 IST)

காமென்மேன் பத்தாது ஹீரோ வேணும்... சீரியஸ் ஹீரோவாக சிவகார்த்திகேயன்!! டீசர் இதோ...

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ஹீரோ படத்தின் டீஸர் சற்றுமுன் வெளியாகியுள்ளது. 
 
நம்ம வீடு பிள்ளை வெற்றியை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன். இரும்புத்திரை பட  இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் ஹீரோ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார்.  
 
இவர்களுடன்  பாலிவுட் நடிகர் அபய் தியோல், அர்ஜூன், இவானா, ரோபோ சங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.  
இந்த படத்தின் டீசர் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தடஹி போலவே, படத்தின் டீசர் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கல்வியை பற்றி ஒரு சிரியஸ் கதைக்களம் கொண்ட படமாக இது இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 
 
மேலும் படம் டிசம்பர் மாதம் வெளியாகும் என தெரிகிறது. இந்த படத்தின் டீசர் இதோ...