வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinojkiyan
Last Updated : வெள்ளி, 1 நவம்பர் 2019 (19:05 IST)

’ஹோட்டல் முதலாளி’ ஆன நடிகர் ’பரோட்டா சூரி’ ! ’எவ்ளோ பெரிய பில்டிங்’

தமிழ் சினிமாவில் வெளியான நல்ல படங்களில் அதிலும் குறிப்பாக விளையாட்டுப் போட்டி சம்பந்தமான படங்களில் வெண்ணிலா கபடிக்குழு திரைப்படத்திற்கு என்றுமே தனி இடம் உண்டு. அப்படத்தில் பரோட்டா சாப்பிடும் போட்டியில் சால்னா குர்மா ஊற்றி பரோட்டக்களை அள்ளி எடுத்தும் சாப்பிடும் சூரிக்கு அப்படத்திலிருந்து சினிமா மார்கெட் எகிறியது.
அதன் பிறகு சந்தானத்தை ஓரம்கட்டிவிடு டாப் காமெடியனாக வந்தார். தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் ஒருபடத்தில் ஹீரோவாகவும் நடிக்க  உள்ளார்.
 
இந்நிலையில் நடிகர் சூரி, மதுரையில் அம்மன் உணவகம் என்ற ஹோட்டல் கட்டி வந்தநிலையில் , நடிகர் சிவகார்த்திகேயன் இன்று அதை திறந்துவைத்தார்.