1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha
Last Updated : புதன், 20 நவம்பர் 2019 (19:12 IST)

சிட்டி சென்டரில் முன்னாள் காதலியை சந்தித்த சிவகார்த்திகேயன்! அவரது கணவரை கண்டு நிம்மதி!

நடிகர் சிவகார்த்திகேயன் விஜய் தொலைக்காட்சியில் "கலக்கப்போவது யாரு" நிகழ்ச்சியில் பங்குபெற்று தனது திறமையை மக்களுக்கு வெளிப்படுத்தி பேமஸ் ஆனார். அதையடுத்து  அதே தொலைக்காட்சியில் "அது இது எது" நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வாய்ப்பு அவருக்கு கொடுக்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் அவருக்கு கிடைத்த வரவேற்பை வைத்து சினிமாவில் நுழைவதற்கான வாய்ப்பு சுலபமாக கிடைத்தது. 
இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் கடந்த 2012ம் ஆண்டு வெளியான மெரினா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அடியெடுத்து வைத்தார். அதை தொடர்ந்து வருத்தப்படாத வாலிபர் சங்கம், கேடி பில்லா கில்லாடி ரங்கா , ரஜினி முருகன், ரெமோ, சீம ராஜா என அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வெற்றி தோல்வி என சரிசமமாக சந்தித்து வந்தார். தற்போது பி.எஸ். மித்திரன் இயக்கத்தில் ஹீரோ படத்தில் நடித்து வருகிறார். 
 
இந்நிலையில் தற்போது சொல்லவரும்  தகவல் என்னவென்றால், சமீபத்தில் சிவகார்த்தியேன் அளித்த பேட்டி ஒன்றில் இதுவரை நீங்கள் யாரிடமும் சொல்லாத ரகசியத்தைப் பற்றி சொல்லுங்கள் என கேட்டதற்கு, சிவா கூறியது, நான் படிக்கும் காலத்தில் ஒரு பெண்ணை ஒன் சைடாக காதலித்து வந்தேன். ஆனால், அவரோ  வேற ஒரு பையனோடு கமிட்டாகி விட்டார். அதனால் அதை  நான் அப்படியே விட்டு விட்டேன். 
 
பின் விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருக்கும் போது அந்த பெண்ணை சிட்டி சென்டரில் ஒரு முறை பார்த்தேன். ஆனால், அந்த பெண் அப்போது அவர் காதலித்த பையன் கூட இல்லை. அதை பார்த்தவுடன் தான் எனக்கு மனதே நிம்மதியாக இருந்தது. “அப்பாடா அவனுக்கும் கிடைக்கல” என்று மனசுக்குள் சந்தோசப்பட்டேன் என சிரித்துக்கொண்டே கூறினார்.