வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 13 ஏப்ரல் 2021 (17:30 IST)

கௌதம் மேனன் மற்றும் சிம்பு படம்… ரஜினி, கமல் மற்றும் எம் ஜி ஆர் பட தலைப்புகள் பரிசிலனை!

ஐசரி வேலன் தயாரிப்பில் நடிகர் சிம்பு அடுத்தடுத்து 3 படங்களில் நடிக்க உள்ளார்.

இந்த படங்களில் 2 படங்களை கௌதம் மேனன் இயக்க உள்ளார். அதில் ஒரு படத்துக்கு இப்போது நதிகளில் நீராடும் சூரியன் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஆனால் மற்றொரு படத்துக்கு பக்கா கமர்ஷியலாக தலைப்பு இருக்க வேண்டும் என்று ஆலோசனை நடத்தி வருகிறார்களாம்.

அதில் சூப்பர் ஸ்டார் மற்றும் சகலகலா வல்லவன் ஆகிய தலைப்புகள் பரிசீலனையில் இருக்க ஒரு எம் ஜி ஆர் படத்தலைப்பும் உள்ளதாம்.