சிம்புவுக்கு இப்படம் ஒரு புதிய மைல்கல்.....தயாரிப்பாளர் தகவல்
நடிகர் சிம்பு நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகிவரும் படம் மாநாடு.அரசியல் பின்னணியில் உர்வாகிவரும் இப்படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரித்துவருகிறார்.
மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் ஒரு புகைப்படத்தைப் பதிவிட்டு குறித்து சுரேஷ் காமாட்சி கூறியுள்ளதாவது: மாநாடு படம் நடிகர் சிம்புவுக்கும் இயக்குநர் வெங்கட்பிரபுவுக்கும் ஒரு மைல் கல்லாக அமையும் எனத் தெரிவித்துள்ளார்.மேலும் நான் பார்த்த வரைக்கும் மாநாடு படம் சிறப்பாக வந்துள்ளது.இப்படத்தில் பணியாற்றிய நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது வாழ்த்துகள் எனத் தெரிவித்துள்ளார்.