வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 13 ஏப்ரல் 2021 (13:16 IST)

எம் ஜி ஆர் மகன் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நடிகர் சசிக்குமார் மற்றும் சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ள எம்ஜிஆர் மகன் திரைப்படம் விரைவில் ரிலிஸாக உள்ளது.

சசிகுமார் நடிப்பில் பொன்ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள ’எம்ஜிஆர் மகன்’ திரைப்படம் ஏப்ரல் 23ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டர் ஒன்றும் வெளியாகி உள்ளது. மேலும் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்பதையும் படக்குழுவினர் உறுதி செய்துள்ளனர். சசிகுமார், மிருணாளினி, சத்யராஜ் சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அந்தோணிதாசன் இசையமைத்துள்ளார். ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படம் சசிகுமார் மற்றும் பொன்ராம் ஆகியோர்களுக்கு வெற்றி படமாக அமையும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இப்போது கொரோனா அதிகமாகியுள்ள நிலையில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் ஏப்ரல் 23 ஆம் தேதி ரிலீஸ் செய்ய உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.