செவ்வாய், 4 அக்டோபர் 2022
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated: வியாழன், 8 ஏப்ரல் 2021 (11:10 IST)

குக் வித் கோமாளியில் நடிகர் சிம்பு - ட்ரெண்டிங் ப்ரோமோ!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி தமிழகமெங்கும் மிகப்பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இதன் இரண்டாவது சீசன் இறுதி கட்டத்தை நோக்கி சென்றுள்ளது. 
 
இந்த சீசனில் புகழ், அஷ்வின், ஷிவாங்கி, மணிமேகலை, பாபா மாஸ்டர், கனி , பாலா , ஷகிலா , பவித்ரா , சுனிதா , தர்ஷா குப்தா, தீபா என பலர் போட்டியாளராக பங்கேற்றனர். இதில் அஸ்வின்,கனி,பாபா பாஸ்கர்,ஷகீலா என நான்கு பேர் பைனலுக்கு ரவுண்டிற்கு முன்னேறியுள்ளனர். 
 
இந்நிலையில் வருகிற ஏப்ரல் 14ஆம் தேதி இந்த இறுதி போட்டி ஒளிபரப்பாகவுள்ள நிலையில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிம்பு பங்கேற்றுள்ளார். இதன் ப்ரோமோ வீடியோ இணையத்தில் வெளியாகி சூப்பர் வைரலாகி நிகழ்ச்சியின் மீதான எதிர்பார்ப்பினை அதிகரித்துள்ளது.