புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : செவ்வாய், 8 ஆகஸ்ட் 2017 (12:53 IST)

மெர்சல் படத்தின் பாடல் காட்சி லீக்; சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ!

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'மெர்சல்' படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்திற்கு வந்துவிட்டதால், இந்த படத்தின் புரமோஷன் பணிகளை தயாரிப்பு நிறுவனமான தேனாண்டாள் ஸ்டுடியோ லிமிடேட் நிறுவனம் விரைவில் தொடங்கவுள்ளது.

 














 
தளபதி விஜய் நடிப்பில் வரும் தீபாவளிக்கு வெளிவரவுள்ள படம் மெர்சல். அட்லீ இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இசை வெளியீட்டு விழா ஆகஸ்ட் 20ம் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக நடக்கவுள்ளது.
 
இந்நிலையில் பாடல் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட ஒரு வீடியோ லீக்காகி வைரலாகியுள்ளது. அதில் வழக்கம்போல விஜய் தன் நடனத்தால் கவர்கிறார் என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.