திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sasikala
Last Updated : வெள்ளி, 4 ஆகஸ்ட் 2017 (17:09 IST)

2,000 அடி ஆழ பள்ளத்தாக்கில் விழுந்து இருவர் பலி; சமூக ஊடகங்களில் வைரலாகும் வீடியோ!

மகாராஷ்டிராவின் சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள அம்போலி காட்டில் 2,000 அடி ஆழத்தில் பள்ளத்தாக்கில் விழுந்ததில் இருவர் உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் மீட்கப்படாவிட்டாலும், அவர்களது வீழ்ச்சியின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக  பரவியுள்ளது.

 
இம்ரான் கராடி (26) மற்றும் பிரதாப் ரத்தோட் (21) ஆகியோர் அந்த பள்ளத்தாக்கில் விழுந்துவிட்டனர், அவர்களது உடல்கள்  மீட்கப்படவில்லை," என சவந்த்வாடி போலீஸ் நிலையத்தின் மூத்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சுனில் தனுவாடே தெரிவித்தார்.  இந்த சம்பவம் ஆகஸ்ட் 1 ம் தேதி அம்போலி காட் என்ற பிரபல சுற்றுலா மையத்தில் கவாலே சாட் பாயில் நடைபெற்றுள்ளது.
 
அங்கு கடுமையான மழை பெய்ததுடன், மலையிலிருந்து நீரை மூழ்கடிக்கும் நீர் மற்றும் மின்தடையம் செயலிழந்துவிட்டதாக  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சமூக ஊடகத்தில் பரவிக் கொண்டிருக்கும் இந்த வீடியோ இரண்டு ஆண்கள், கையில்  பாட்டில்கள், பள்ளத்தாக்கின் விளிம்பைச் சுற்றி உள்ள வேலியின் மீதேறி இருவரும் விளிம்பில் நின்று நிலை தடுமாறி கீழே  விழுவது செல் பேனில் பதிவாகியுள்ளது.