திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 28 ஜூலை 2017 (14:35 IST)

தீ பிடித்து எரிந்த ரெட்மி நோட் 4: வைரல் வீடியோ!!

சீன நிறுவனமான சியோமியின் ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போன் தீப்பிடித்து எரிந்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.


 
 
பெங்களூர் நகரத்தில் அமைந்திருக்கும் ஒரு செல்போன் கடையின் சிசிடிவு கேமராவில் இது தொடர்பான வீடியோ பதிவாகியுள்ளது.
 
கடைக்காரர் வாடிக்கையாளரின் ஸ்மார்ட்போனை பழுபார்க்க வாங்குகிறார். சிம் கார்ட் ஒன்றை போனில் பொருந்த முயற்சிக்கும் போது செல்போன் தீப்பிடித்து எரிய தொடங்கியது. 
 
உடனே, போனை கடைக்காரர் கீழே போட்டு தீயை அணைக்க முயற்சிக்கிறார். அந்த ஸ்மார்ட்போன் ரெட்மி 4 மாடல் என கூறப்படுகிறது.