1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 21 ஆகஸ்ட் 2020 (07:43 IST)

இந்திய கிரிக்கெட் அணியில் உள்ள தமிழக வீரருக்கு திருமணம்: வாழ்த்து கூறிய சன்ரைசர்ஸ் அணி

இந்திய கிரிக்கெட் அணியில் உள்ள தமிழக வீரருக்கு திருமணம்
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர்களில் ஒருவரான விஜய்சங்கருக்கு திருமண நிச்சயதார்த்தம் ஆகி உள்ளதை அடுத்து கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர் 
 
கடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்காக விளையாடிய வீரர்களில் ஒருவர் விஜய் சங்கர். பேட்டிங் மற்றும் பவுலிங் ஆகியவற்றில் சிறந்தவரான இவர் ஆல்-ரவுண்டராக அணியில் இடம்பெற்றுள்ளார் 
 
மேலும் இவர் ஐபிஎல் போட்டிகளில் சன் ரைசர்ஸ் அணியின் முக்கிய வீரர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் கிரிக்கெட் வீரர் விஜய் சங்கருக்கும் வைஷாலி என்ற பெண்ணுக்கும் இருதரப்பு பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். இதனையடுத்து நேற்று இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது 
 
நிச்சயதார்த்த புகைப்படத்தை சன்ரைசர்ஸ் அணி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. விஜய் சங்கர் மற்றும் வைஷாலி திருமணம் விரைவில் நடைபெறும் என்று கூறப்படுகிறது 
மேலும் சன்ரைஸ் பதிவு செய்த இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் மற்றும் சக கிரிக்கெட் வீரர்கள் தொடர்ச்சியாக வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர்
 
வரும் செப்டம்பர் மாதம் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் அணிக்காக விஜய் சங்கர் விளையாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது