விரைவில் திருமணம் செய்யப்போகும் மீரா மிதுன் - மணமகன் யார் தெரியுமா?

Papiksha| Last Updated: திங்கள், 21 அக்டோபர் 2019 (13:14 IST)
கடந்த 2016- ம் ஆண்டு மிஸ் தமிழ்நாடு சவுத் பட்டம் வென்ற மீரா மிதுனுக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கதவு தட்டியது. பின்னர் சூர்யா நடித்த 8 தோட்டாக்கள் படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்திருந்தார். அதையடுத்து அழகி போட்டி நடத்துவதாக கூறி பல பெண்களை மோசடி செய்து மோசடி புகாரில் சிக்கினார். 


 
பின்னர் பிக்பாஸில் பங்கேற்க அவருக்கு வாய்ப்பு கிடைத்து. ஆனால், அங்கு சக போட்டியாளர்களுடன் சண்டை , வாக்குவாதம் என மக்களிடையே அவப்பெயரை சமபதித்த மீரா பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். இதையடுத்து கடந்த சில நாட்களாக அவருக்கு கொலை மிரட்டல் ஆடியோ, பரபரப்பான வீடியோ என்று தொடர் சிக்கலில் தவித்து வந்தார். 
 
இந்நிலையில், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான மீரா மீதும் இப்போது சென்னை விட்டு வெளியேறி மும்பையில் வசித்து வருகிறாராம். அடுத்தடுத்து பல பிரச்சனைகளை சந்தித்து வந்த மீரா மிதுன் தற்போது திருமணம் செய்வது கொள்வது தான் சரியான வழி என்று முடிவெடுத்து  தனது நெருங்கிய நண்பர் ஒருவரை திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். 


இதில் மேலும் படிக்கவும் :