செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: ஞாயிறு, 13 அக்டோபர் 2019 (16:13 IST)

மீரா மிதுனை யார் படத்தில் கமிட்டாக்கியது? கடுப்பான நவீன்!

மீரா மிதுன் படத்தில் முதல் இடத்தில் ஒரு போதும் கமிட் செய்யப்படவே இல்லை என அக்தி சிறகுகள் படத்தின் இயக்குனர் நவீன் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.
 
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களும் ஒருவராக நுழைந்தவர் மீரா மிதுன். இவர் சமீபத்தில் நம்ம வீட்டு பிள்ளை படத்தில் இருந்து தனது படத்தின் காட்சிகளை நீக்கியதாக இயக்குனர் பாண்டிராஜ், சிவராத்திகேயன் மற்றும் தயாரிப்பு நிறுவனமான சன் பிச்சர்ஸ் நிறுவனத்தை விளாசியிருந்தார். 
 
அதனை தொடர்ந்து, மூடர்கூடம் படத்தின் இயக்குனர் நவீன் இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் மற்றும் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் அக்னி சிறகுகள் படத்தில் இருந்து தன்னை விளக்கிவிட்டு அக்ஷரா ஹாசனை ஒப்பந்தமாக்கியுள்ளதாக கூறி சர்சையை ஏற்படுத்தினார். 
 
இந்நிலையில் இதற்கு பதில் அளித்துள்ளார் அப்படத்தின் இயக்குனர் நவீன். அவர் கூறியுள்ளதாவது, அக்னி சிறகுகள் படத்தில் ஷாலினி பாண்டேவுக்கு பதில் அக்ஷரா ஹாசன் நடிக்கிறார். அக்ஷராதான் ஃபீமேல் லீடிங் ரோல். மீரா மிதுன் படத்தில் முதல் இடத்தில் ஒரு போதும் கமிட் செய்யப்படவே இல்லை என தெரிவித்துள்ளார்.